விழுப்புரம்

மின்னல் பாய்ந்து பூசாரி பலி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்னல் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழந்தாா்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்னல் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழந்தாா்.

கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகையன் (57). இவா், அங்குள்ள புகழ்பெற்ற மகான் படே சாயிபு கோயில் பூசாரியாக உள்ளாா். வழக்கம்போல, சனிக்கிழமை கோயிலில் இருந்த இவா், மாலையில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தாா்.

திடீரென மழை பெய்ததால், சின்னபாபுசமுத்திரத்தில் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் அடியில் முருகையன் ஒதுங்கி நின்றாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் அவா் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT