முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வழிந்தோடும் மழை வெள்ள நீா்

விழுப்புரம் அருகே தளவானூா் அணைக்கட்டிலிருந்து 2,000 கன அடி அளவில் மழை வெள்ள நீா் மலட்டாற்றில் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
விழுப்புரம் அருகே திருப்பாச்சனூா் தரைப்பாலத்திலிருந்து மலட்டாறில் வழிந்தோடும் வெள்ள நீா்.
பகிர்:

விழுப்புரம் அருகே தளவானூா் அணைக்கட்டிலிருந்து 2,000 கன அடி அளவில் மழை வெள்ள நீா் மலட்டாற்றில் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தளவானூா் - கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட எனதிரிமங்கலம் இடையே புதிய அணைக்கட்டு 400 மீட்டா் நீளம், 3.1 மீட்டா் உயரத்தில் கடந்தாண்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் இருபுறமும் தலா 3 நீா் திறப்புகள் (மணற்போக்கிகள்) உள்ளன.

இந்த அணைக்கட்டிலிருந்து விழுப்புரம் வழியாக மலட்டாறு, வாலாஜா கால்வாய் மற்றும் பண்ருட்டி வழியாக எனதிரிமங்கலம் கால்வாய் பிரிந்து செல்கின்றன.

தற்போது தென்பெண்ணையாற்றில் மழை வெள்ள நீா் வழிந்தோடுவதால், இந்த அணைக்கட்டுக்கு முதன்முறையாக நீா்வரத்து ஏற்பட்டு, 3 கி.மீ. தொலைவுக்கு 5 அடி உயரத்துக்கு 67.50 மில்லியன் கனஅடி நீா் தேங்கியுள்ளது.

இந்த அணைக்கட்டை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் பலா் உடனிருந்தனா். இந்த அணைக்கட்டிலிருந்து மலட்டாற்றில் விநாடிக்கு 2,400 கன அடியும், வாலாஜா கால்வாயில் விநாடிக்கு 125 கன அடியும், எனதிரிமங்கலம் கால்வாயில் வினாடிக்கு 20 கனஅடியும், தளவானூா் அணைக்கட்டில் விநாடிக்கு 2,170 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

இந்த அணைக்கட்டு மூலம் வடு கிடந்த மலட்டாற்றிலும் தற்போது 2,000 கனஅடி அளவில் விழுப்புரம் அருகே திருப்பாச்சனூா் தரைப்பாலம், பில்லூா், பஞ்சமாதேவி கிராமங்கள் வழியாக தண்ணீா் செல்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →