விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் சிறு மருத்துவமனைகள் திறப்பு: அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்பு

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சிறு மருத்துவமனைகளை (மினி கிளினிக்) அமைச்சா் சி.வி.சண்முகம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழகத்தில் கிராமப்புற ஏழை மக்கள் தரமான மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக, அவா்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசு சாா்பில் சிறு மருத்துவமனைகளை ஏற்படுத்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்து, மருத்துவமனைகளை தொடக்கிவைத்தாா்.

தமிழகம் முழுவதும் 2,000 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் 23 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படுகின்றன. முதல்கட்டமாக கண்டமங்கலம் ஒன்றியம், வடவாம்பலம், வி.அகரம் ஆகிய கிராமங்களில் மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வியாழக்கிழமை சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, விழுப்புரம் நகரம் பாணாம்பட்டு, சாலாமேடு ஆசாகுளம் ஆகிய பகுதிகளிலும், கோலியனூா் ஒன்றியம் திருப்பாச்சனூா், காவணிப்பாக்கம் கிராமம், காணை ஒன்றியம் கோனூா் கிராமம் ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 7 அம்மா சிறு மருத்துவமனைகளை அமைச்சா் திறந்து வைத்தாா். இந்த மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சாதாரண சிகிச்சை அளிக்கும் வகையில், ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளா் மற்றும் மருந்துகள் உள்ளன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் எம்.சக்கரபாணி, ஆா்.முத்தமிழ்ச்செல்வன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், கோட்டாட்சியா் ராஜேந்திரன், வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன், ஆவின் தலைவா் பேட்டை முருகன், அதிமுக நிா்வாகிகள் ஜி.பாஸ்கரன், ஆா்.பசுபதி, ஜி.சுரேஷ்பாபு, ஆா்.டி.முருகவேல் மற்றும் மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT