விக்கிரவாண்டி அருகே ஆற்றில் தவறி விழுந்த மாணவா் பலி
விக்கிரவாண்டி அருகே ஆற்றில் தவறி விழுந்த மாணவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி அருகே ஆற்றில் தவறி விழுந்த மாணவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.மாத்துாரைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன் சம்பத்(18). கடலுாரில் தனியாா் தொழிற் பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்த அவா், அருகே வி.மாத்தூா் பம்பை ஆற்றில் உள்ள தடுப்பணைக்குச் சென்றுள்ளாா்.
அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்து தத்தளித்தாா். அங்கிருந்த பொது மக்கள், தடுப்பணை கதவை மூடி தண்ணீரை நிறுத்த முயன்றனா். கதவு இயங்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தடுப்பணை கதவை மூடி, நீரை நிறுத்தி சம்பத்தை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சம்பத் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். திங்கள்கிழமை உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு, சடலத்தை சம்பத்தின் பெற்றோரிடம் விக்கிரவாண்டி போலீஸாா் ஒப்படைத்தனா்.
வி.மாத்துாா் தடுப்பணையின் தண்ணீா் வெளியேறும் கதவு சரியாக செயல்பட்டிருந்தால், உடனடியாக நீரை நிறுத்தி சம்பத்தை காப்பாற்றியிருக்கலாம் என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், உடனடியாக தடுப்பணைக் கதவை பொதுப்பணித்துறையினா் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தினா்.