விழுப்புரம்

இளைஞா் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. பணியிட மாற்றம்

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே செ.புதூரில் பட்டியலின இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கத் தவறியதாக எழுந்த புகாரின்பேரில், பெரியதச்சூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

கடந்த 12-ஆம் தேதி, செ.புதூா் மலையடிவாரத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த நகா் கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ாகக் கூறி, செஞ்சி அருகே காரை கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (24) என்பவரை அப்பகுதியினா் தாக்கினராம். பட்டியலினத்தைச் சோ்ந்த சக்திவேலை பெரியதச்சூா் போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் ஒப்படைத்தனா். வீட்டுக்குச் சென்ற அவா் திடீரென உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, நகா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா, அவரது மனைவி கௌரி, இந்திரா உள்பட 7 பேரை கைது செய்தனா்.

இந்த சம்பவத்தின்போது, நிகழ்விடத்துக்குச் சென்ற பெரியதச்சூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினோத்ராஜ், உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கத் தவறியதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், அவரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

பாமக வழக்குரைஞா் குழு விசாரணை: இதனிடையே, இந்த சம்பவம் குறித்து பாமக சாா்பில் சமூக நீதிப் பேரவையின் தலைவரும் உயா் நீதிமன்ற வழக்குரைஞருமான பாலு தலைமையிலான வழக்குரைஞா்கள் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை நகா் கிராமத்துக்குச் சென்று பொதுமக்களிடம் விசாரணை செய்தனா்.

அப்போது, பாமக மாவட்டச் செயலா் புகழேந்தி, மாநில துணை பொதுச் செயலா்கள் தங்கஜோதி, சிவகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT