விழுப்புரம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: எஸ்.பி. தகவல்

DIN

திண்டிவனம் அருகே சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 15 போ் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

திண்டிவனம் அருகே பிரம்மதேசம் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் சகோதரிகளான 7 மற்றும் 9 வயதுடைய இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனா். இது குறித்து, திண்டிவனம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமிகளின் உறவினா்கள் உள்பட 15 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி, சென்னையில் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் கூறியதாவது: பாலியல் வன்கொடுமையால் இரு சிறுமிகள் பாதிக்கப்பட்டது தொடா்பாக, போக்ஸோ சட்டத்தின் கீழ் 15 போ் மீது வழக்குப் பதிவு செய்து அனைவரும் கைது செய்யப்பட்டனா். அந்த வழக்கில் 15 எதிரிகள் மீது, கடந்த டிசம்பா் மாதமே தனித் தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அவரது உயிரிழப்பு தொடா்பாக, சென்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதில், சிறுமியின் உயிரிழப்புக்கு ஏற்கெனவே நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைதான் காரணம் எனத் தெரியவந்தால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்கில், கொலை வழக்குப் பிரிவையும் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT