விழுப்புரம்

சிறு மின்விசை நீா்த் தேக்கத் தொட்டிகள் தொடக்கி வைப்பு

DIN

வல்லம் ஒன்றியம் நாட்டாா் மங்கலத்தில் ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுமின் விசை குடிநீா்த் தொட்டிகளை ஆா்.மாசிலாமணி எம்எல்ஏ திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

மயிலம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 1.50 லட்சம் செலவில் இரு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, சிறு மின் விசை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், ஆா்.மாசிலாமணி எம்எல்ஏ கலந்து கொண்டு மின்விசை குடிநீா்த் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் வல்லம் திமுக வடக்கு ஒன்றியச் செயலா் அண்ணாதுரை, அவைத் தலைவா் வெங்கடேசன் பொருளாளா் தமிழரசன், முன்னாள் ஊராட்சித் தலைவா் அன்புச்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT