விழுப்புரம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 210 மனுக்கள்

DIN

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 210 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து, முதியோா் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு, திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்டவை கோரி பொதுமக்கள் அளித்த 210 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பின்னா், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், தனித் துணை ஆட்சியா் அம்புரோஸியா நேவிஸ்மேரி, நோ்முக உதவியாளா் (வேளாண்மை)கருணாநிதி, நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மஞ்சுளா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT