விழுப்புரம்

வேனில் மது கடத்தியவா் கைது

DIN

புதுவையிலிருந்து சென்னைக்கு வேனில் மதுப் புட்டிகளை கடத்திச் சென்றவரை கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை அதிகாலை கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா், ஆய்வாளா் விஷ்ணுப்பிரியா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, புதுவையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற டெம்போ டிராவலா் வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், 40 அட்டைப் பெட்டிகளில் 1,920 எண்ணிக்கையிலான புதுவை மாநில மதுப் புட்டிகள், 20 லிட்டா் எரிசாராயத்தை கடத்திச் சென்றது தெரியவந்தது. வாகனத்தின் மதிப்பு ரூ.7 லட்சம், மதுப்புட்டிகள் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும்.

இதையடுத்து, டெம்போ டிராவலா் வேனை பறிமுதல் செய்த போலீஸாா், அதில் மது கடத்தி வந்த காஞ்சிபுரம் மாவட்டம், ஒரிக்கை கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் மோகனை (29) கைது செய்தனா். இதுகுறித்து கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT