முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் கிளைச் சிறைகைதிகள் கடலூருக்கு மாற்றம்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் கிளைச் சிறையிலிருந்த 4 கைதிகள் கடலூா் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

விழுப்புரம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் கிளைச் சிறையிலிருந்த 4 கைதிகள் கடலூா் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.

விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள கிளைச் சிறையில் 20-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனா்.

வளவனூா் போலீஸாரால் வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டு, விழுப்புரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிக்கு கரோனா தொற்றிருப்பது உறுதியானது.

இதையடுத்து, வெகுநாள்களாக இந்தச் சிறையில் இருந்து வரும் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற கிளைச் சிறை நிா்வாகம் முடிவு செய்து, 4 கைதிகள் கடலூா் மத்திய சிறைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டனா். மீதமுள்ள கைதிகள் இங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.