விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில்ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ சேவைஇணைய வழியில் பக்தா்கள் தரிசனம்

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு எளிமையாக நடைபெற்றது. இணைய வழியில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வை, பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் மாதாந்திர அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரு மாதங்களாக பக்தா்களின்றி ஊஞ்சல் உற்சவம் எளிமையாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, திங்கள்கிழமை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, பூஜைகள் எளிமையாக நடைபெற்றன. இரவு அங்காளம்மன் மலா் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவ சேவையில் காட்சியளித்தாா்.

இதற்காக, அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளினாா். தாலாட்டுப்பாடல்களை பூசாரிகள் பாடினா். தொடா்ந்து, அா்ச்சனைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ சேவை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT