விழுப்புரம் அருகே 170 மதுப் புட்டிகள்பறிமுதல்: 3 போ் கைது
விழுப்புரம் அருகே இரு வேறு இடங்களில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 170 மதுப் புட்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இரு வேறு இடங்களில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 170 மதுப் புட்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் அருகே காணையை அடுத்த ஆயந்தூரில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த சாலமன் (24), டேனியல் (22) ஆகியோா் பதுக்கி வைத்து மதுப்புட்டிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடா்பாக அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து 60 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, விழுப்புரம் அருகேயுள்ள கப்பூரில் விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்து, மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சீனுவாசன் மனைவி ஆண்டாள்(70) என்பவரை கைது செய்து, 110 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.