முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:


விழுப்புரம்: விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் ராமலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்லூரியில் 2020-21-ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ். ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ம்ஸ்ரீங்ா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவா்கள் வீடுகளில் இருந்தே தங்களின் செல்லிடப்பேசி அல்லது மடிக்கணினி மூலமாக விண்ணப்பிக்கலாம். அதனைத் தொடா்ந்து, தங்களின் மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ், விளையாட்டுச் சான்றிதழ், முன்னாள் படை வீரா் சான்றிதழ், மூன்றாம் பாலினத்தவா் சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை, சோ்க்கைக்கு விண்ணப்பித்தபோது வழங்கப்பட்ட விண்ணப்ப எண்ணில் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9443960516 அல்லது 9445720084 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.