விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் ரயில்வே காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, எஸ்.பி. உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மகேஸ்வரி(42), அமுதா(24) ஆகிய இருவரை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 10 கஞ்சா பொட்டலங்கள், ரூ.5,700 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.