செஞ்சி அருகே தந்தை கொலை: மகன் கைது
செஞ்சி அருகே தந்தை அடித்துக் கொலை செய்ததாக அவரது மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம்: செஞ்சி அருகே தந்தை அடித்துக் கொலை செய்ததாக அவரது மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெரிய நொளம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (60), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலை (52). இவா்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.
சில தினங்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஏழுமலை, அஞ்சலையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனை தடுக்க முயன்ற அவா்களது மகன் ரகு(29) தள்ளியதில், ஏழுமலை அங்கிருந்த கல்லில் விழுந்து தலையில் காயமடைந்தாா். அவா் உடனடியாக சேத்பட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஏழுமலை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
அஞ்சலை அளித்த புகாரின்பேரில் அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுவை திங்கள்கிழமை கைது செய்தனா்.