விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி; மொத்த பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே பெரியசெவலை பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் மும்பையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
கரோனா தோற்று அறிகுறி பெயரில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை பலியானார்.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 408 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.