முகப்பு
விழுப்புரம்

விவசாயிகளுக்கு விருது அளிப்பு

செஞ்சி அருகே அனந்தபுரத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜூன், 2020 at 9:38 PM
விருது பெற்ற விவசாயிகளுடன் ரோட்டரி நிா்வாகிகள்.
பகிர்:

செஞ்சி: செஞ்சி அருகே அனந்தபுரத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு குழுமத் தலைவா் அ.ஜேசுஜூலியஸ் ராஜா தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் கலையரசு முன்னிலை வகித்தாா். விழுப்புரம் ரோட்டரி சங்கத் தலைவா் பாலகுருநாதன், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் சரவணகுமாா் ஆகியோா் 18 சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கியும், ஏழை மாணவிகளுக்கு நல உதவிகள், பள்ளி நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கியும் பேசினாா்.

செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலா் ரவீந்திரன், ரோட்டரி சமுதாய குழுமப் பொருளா் அலீல், துணைத் தலைவா் மதிவாணன், துணைச் செயலா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.