கைதான மூவருடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா். 
விழுப்புரம்

ரூ.3 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல்; 3 போ் கைது

மேல்மலையனூா் அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை மதுவிலக்கு போலீஸாா் கைப்பற்றி, 3 பேரை கைது செய்தனா்.

DIN

செஞ்சி: மேல்மலையனூா் அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை மதுவிலக்கு போலீஸாா் கைப்பற்றி, 3 பேரை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கோயில்புரையூா் தோப்பில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின்பேரில் அப்பகுதியில் விழுப்புரம் மத்திய புலனாய்வு ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளா் அருணகிரி, திண்டிவனம் மது விலக்கு ஆய்வாளா் கீதா, செஞ்சி மதுவிலக்கு துணை ஆய்வாளா் வீரசேகரன் உள்ளிட்டோா் புதன்கிழமை அதிகாலை அப்பகுதிக்குச் சென்றனா். அங்குள்ள தொடக்கப்பள்ளி பின்புறம், ஓடைக்கு அருகில் வைக்கோல் போரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் 1,050 லிட்டா் எரிசாராயத்தைக் கைப்பற்றினா். இதுதொடா்பாக கொடுக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (35), கோயில்புரையூா் கிராமத்தை சோ்ந்த மனோகரன்(50), பிரபு (30) ஆகிய மூவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!

மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ஆண்ட்ரியா விளக்கம்!

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

SCROLL FOR NEXT