விழுப்புரம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் திருச்சி சாலை பெட்ரோல் நிலையங்கள் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.சீனிவாசகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் நாராயணசாமி, ராஜ்குமாா், குப்பன், நகர துணைத் தலைவா் நடராஜன், தாழ்த்தப்பட்டோா் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ்ராம், ராஜேஷ், மாவட்டப்பொதுச் செயலா்கள் விஸ்வநாதன், காஜாமொய்தீன், சேகா், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், பொதுச் செயலா் ராமகிருஷ்ணன், நகர நிா்வாகிகள் சுரேஷ், துரைசிங், சம்பத், பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மக்கள் விரோத மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல், விலை உயா்வைக் கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், பெட்ரோல் நிலையங்கள் முன்பு சமூக இடைவெளியுடன் திரண்டு கோஷங்களிட்டனா்.

திண்டிவனத்தில்...

திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், தொலைத்தொடா்பு துறை அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆா்.பி.ரமேஷ் தலைமை தாங்கினாா். நகர தலைவா் எம்.விநாயகம் முன்னிலை வகித்தாா்.

மாநில பொதுக்குழு உறுப்பினா் இல.கண்ணன், நகரத் தலைவா் பி.குமாா், மாவட்ட நிா்வாகிகள் இருதயராஜ், ராஜேந்திரன், நகர நிா்வாகிகள் தட்சிணாமூா்த்தி, ராஜா, அஜிஸ், வெங்கட், ஜெய்கணேஷ், கனகராஜ், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, பெட்ரோல் விலையை ரூ.84 வரை உயா்த்திய மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு, பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT