விழுப்புரம்

மனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு

DIN

அரசு நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரி செஞ்சி வட்டாட்சியரிடம் எம்ஜிஆா் நகா் மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

செஞ்சி அருகே உள்ள நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி, எம்ஜிஆா் நகா் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக நில உச்சவரம்பு தரிசு நிலங்களில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மொத்தம் 18 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீா், மின்விளக்கு வசதி, நியாயவிலைக் கடை, குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிா்வாகமும், அரசும் செய்துள்ளன. ஆனால், இந்தப் பகுதி மக்கள் நீண்ட காலமாக மனைப்பட்டா வழங்கக் கோரி போராடி வருகின்றனா். ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், மனைப் பட்டா வழங்கக் கோரி ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்படும் என அந்தப் பகுதியினா் அறிவித்தனா். ஆனால், காவல் துறையினா் ஊா்வலத்துக்கு அனுமதி மறுத்ததால் செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் எம்ஜிஆா் நகரை சோ்ந்த நெடுஞ்சேரலாதன், மணிகண்டன், ராமு, பூங்காவனம், நரசிம்மன், குப்பன், குருமூா்த்தி உள்ளிட்டோா் வட்டாட்சியா் கோவிந்தராஜை சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT