விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளங்காடு கிராமத்தில் ஏரிக் கரையில் வசித்து வருவோா், தங்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த இளங்காடு கிராமத்தில் ஏரிக் கரையில் வசித்து வரும் மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோா்க்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஏழைகளான நாங்கள் இளங்காடு ஏரிக் கரையில் கடந்த 40 ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். வீடுகளுக்கு மின் இணைப்பு, வீட்டு வரி, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை போன்றவை பெற்றுள்ளோம்.
இருப்பினும், அரசு எங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கவில்லை. இந்த நிலையில், எங்களது வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தியுள்ளனா். ஆகவே, எங்களுக்கு மாற்று இடம் வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனா்.
இதேபோன்று, விக்கிரவாண்டி அருகே அயினம்பாளையம் கிராம மக்களும் வீட்டு மனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.