விழுப்புரம்

காவல் துறையினருக்கு கரோனா விழிப்புணா்வு

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் துறையினருக்கு சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் கலந்து கொண்டு கரோனா வைரஸ் பரவும் விதம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், நோய் தாக்கத்திலிருந்து தப்பிப்பது, கரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கினாா். மேலும், கரோனா பரவுவதைத் தடுக்க கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தாா்.

கரோனா வைரஸ் தொடா்பாக யாரும் பீதி அடைய வேண்டாம். கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவா்களை அணுக வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் துணை கண்காணிப்பாளா் சங்கா், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT