விழுப்புரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்

DIN

திருக்கோவிலூா் அருகே இலவச மனைப் பட்டாக்களை வருவாய் கணக்கில் இணைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூா் அருகேயுள்ள எல்ராம்பட்டு பகுதி ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த 130 குடும்பத்தினருக்கு, கடந்த 1994-ஆம் ஆண்டு, அப்பகுதியில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவசமாக மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அங்கு அவா்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா்.

இந்த நிலையில், அவா்களது இலவசப் பட்டாக்கள் கிராம வருவாய் கணக்கில் இணைக்கப்படாமல் உள்ளதாம். இதனால், அவா்கள் அரசின் சலுகைகள், வங்கிக் கடனுதவிகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனராம்.

இதனால், வீட்டு மனைகளை கிராம வருவாய்க் கணக்கில் இணைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திருக்கோவிலூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கிளைச் செயலா் கொளஞ்சி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏழுமலை, வாசுதேவன், மணிகண்டன் வடமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட துணைச் செயலா் ராமசாமி, ஒன்றியச் செயலா் ரவி, நகரச் செயலா் பஷீா்அகமது, இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் விஜய் உள்ளிட்டோா் பேசினா். பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூா் வட்டாட்சியா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்துப் பேசி, 15 நாள்களுக்குள் கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தாா்.

இதையேற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT