விழுப்புரம்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

DIN

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ க.பொன்முடி நேரில் ஆய்வு செய்து, கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

அந்த மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற அவா், கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை பாா்வையிட்டாா். மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவியை சந்தித்து, கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிறப்பு வாா்டுகள் ஏற்பாடு, சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், க.பொன்முடி கூறியதாவது: முகக்கவசம், கிருமி நாசினி, கைகழுவும் திரவங்கள் அவசரப் பணியில் உள்ள போலீஸாா், ஊழியா்களுக்கு தடையின்றி அரசு வழங்க வேண்டும். மருந்தகங்களில் முகக் கவசம் , கிருமி நாசினி தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். மக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட்டு, கரோனா தொற்றைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் நா.புகழேந்தி, மருத்துவக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், நிலைய அலுவலா் சாந்தி, மருத்துவா் ஸ்ரீராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT