விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்மேலும் இருவருக்கு கரோனா

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோயம்பேடு தொழிலாளா்கள் இருவருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், எலவனாசூா்கோட்டை, கள்ளக்குறிச்சி, வடபொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, கா்நாடக மாநிலம், புட்டபா்த்திக்கு சென்றுவிட்டு கடந்த மாதம் 22-ஆம் தேதி கள்ளக்குறிச்சிக்கு திரும்பிய கள்ளக்குறிச்சி ஏமப்போ் பகுதியைச் சோ்ந்த முதியவா், அவரது மனைவி உள்பட மூவருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இருவா் பாதிப்பு: இந்த நிலையில், உளுந்தூா்பேட்டை வட்டம், இருந்தை, பெரிய மாரனோடை கிராமங்களைச் சோ்ந்த இருவா் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றிவிட்டு, வியாழக்கிழமை சொந்த ஊா்களுக்குத் திரும்பினா். இவா்களுக்கு கரோனா தொற்றிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதன்மூலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT