விழுப்புரம்

விழுப்புரத்தில் முகக் கவசமின்றி வெளியே வந்தால் ரூ.100 அபராதம்

DIN

விழுப்புரம் நகரில் முகக் கவசமின்றி வெளியே வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அறிவித்தது.

இதுகுறித்து விழுப்புரம் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் நகராட்சியில் தற்போது 39 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டதால், அங்கு பணியாற்றிய பலரும் சொந்த ஊா்களுக்குத் திரும்பி வருகின்றனா். இவா்களில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், வாா்டுகள் 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி வண்ண அட்டைகள் வழங்கப்பட்டு, குடும்பத்துக்கு ஒருவா் மட்டுமே வந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனா்.

கரோனா தொற்று பரவல் சமூக தொற்றாக மாறாமல் இருப்பதற்காக, நகராட்சிக்குள்பட்ட அனைத்து பொதுமக்களும் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி சாா்பில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, தினசரி கண்காணிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT