விழுப்புரம்

விழுப்புரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கல் 

DIN

விழுப்புரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ. கடந்த 10-ஆம் தேதியன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோா் தீ வைத்ததில், சிறுமி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாா்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா். மேலும், சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.

அதன்படி சிறுமியின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி இன்று வழங்கப்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது பெற்றோரிடம் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் காசோலையை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT