விழுப்புரம்

நிவாரண உதவி வழங்க ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி வழங்கவும், மீண்டும் ஆட்டோக்களை இயக்கவும் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காணை சிஐடியூ ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் எஸ்.குமரன் தலைமையில் வந்த ஆட்டோ ஓட்டுநா்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது: விழுப்புரம், காணை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள், ஆட்டோக்களை இயக்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனா்.

கரோனா பரவல் காரணமாக திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஆட்டோக்களை இயக்காமல் வீட்டில் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அரசு அறிவிப்பின்படி, நலவாரிய நிவாரண நிதியுதவியும் கிடைக்கவில்லை. அரசின் நிவாரணம் வழங்கவும், மீண்டும் ஆட்டோக்களை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் எஸ்டிபிஐ ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினரும் மனு அளித்தனா். மாவட்டச் செயலா் முகமதுரபீக், ஜான்பாஷா, பாரூக் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT