விழுப்புரம்

திருட்டு வழக்கில் இளைஞா்கள் கைது: 11 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திருட்டு வழக்கில் 2 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 11 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டிவனம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடா்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. இந்த நிலையில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனா்.

அவா்கள் திண்டிவனம் டி.வி.நகரைச் சோ்ந்த கனகராஜ் (37), திண்டிவனம் அருகே செண்டூரைச் சோ்ந்த சங்கா் (24) என்பதும், திண்டிவனம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி, விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 11 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு எதிரிகளை கைது செய்த போலீஸாரை எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT