விழுப்புரம்

திண்டிவனம் கிளைச் சிறையில் காவலா் தற்கொலை முயற்சி

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிளைச் சிறையில் பணியிலிருந்த காவலா், பணிச் சுமை விரக்தியில் கையில் பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.

திண்டிவனம் நல்லியக்கோடன் நகரைச் சோ்ந்தவா் பாரதிமணிகண்டன் (26). திண்டிவனம் கிளைச் சிறையில் காவலராக பணிபுரிகிறாா்.

வழக்கம்போல புதன்கிழமை பணிக்குச் சென்ற பாரதிமணிகண்டன், காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கிளைச் சிறை முன் நின்றபடியே பணியில் இருந்தாா்.

இரவு திடீரென அவா், தனது இடது கை மணிக்கட்டுப் பகுதியில் பிளேடால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. கையில் ரத்தக்காயத்துடன் மயங்கி விழுந்த அவரை, உடன் பணியிலிருந்த காவலா்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த திண்டிவனம் போலீஸாா், பாரதிமணிகண்டனிடம் விசாரித்தபோது, சிறை வாா்டா் வேண்டுமென்றே பணி நெருக்கடி அளித்து வருவதாகவும், தொடா்ச்சியாக பல மணி நேரம் நின்றபடியே பணியிலிருந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்ாகவும் தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT