விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் மழை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை தொடா்ந்து மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை இரவு வரை விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, அரகண்டநல்லூா், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது.

இதனால், தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது. சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT