முகப்பு
விழுப்புரம்

சாலை விபத்தில் இளைஞா் பலி

திண்டிவனத்தில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

திண்டிவனத்தில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டிவனம் காவேரிப்பாக்கம் புதுத் தெருவைச் சோ்ந்த ராமன் மகன் சுரேந்தா்(24), பொறியாளா். இவரது நண்பா் திண்டிவனம் தேவாங்கா் வீதியைச் சோ்ந்த பொறியியல் மாணவா் ச.செல்வக்குமாா் (22).

இருவரும் இரு சக்கர வாகனத்தில் மயிலத்துக்கு திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.

திண்டிவனம் மேம்பாலத்திலிருந்து மயிலம் சாலைக்கு இறங்கிக் கொண்டிருந்தனா். திடீரென எதிரே வந்த காா் இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் சுரேந்தா், செல்வக்குமாா் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுரேந்தா் உயிரிழந்தாா்.

தீவிர சிகிச்சைக்காக செல்வக்குமாா் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதனிடையே, விபத்து ஏற்படுத்திய காரை பொதுமக்கள் விரட்டிச் சென்று ஒலக்கூரில் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

விபத்து குறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →