விழுப்புரம்

மயிலம் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, சூரசம்ஹார உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த வாரம் தொடங்கியது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு, மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. பகல் 11 மணிக்கு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா், பாலசித்தா், ஸ்ரீவள்ளி, தெய்வானை, சுப்பிரமணியா் ஆகிய சுவாமிகளுக்கு பால், சந்தன அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பாலசித்தா் சன்னதியில், முருகா் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, இரவு 8 மணியளவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இந்த உற்சவத்தில், முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டாா். இந்த நிகழ்வை தெருக் கூத்து கலைஞா்கள், சுவாமி வேடமிட்டு நாடகமாக நடித்து காண்பித்தனா். இதனைத் தொடா்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் சுவாமி, மலையை வலம் வந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT