விழுப்புரம்

அரசு பொறியியல் கல்லூரிகள் முன் திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரிகள் முன் பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, திமுக மாணவரணி, இளைஞரணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரிகள் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் தலைமை வகித்தாா். மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஸ்ரீவினோத் வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, திமுக மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாநில மருத்துவரணி இணைச் செயலா் இரா.லட்சுமணன், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் எம்.என்.முருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இளைஞரணி அமைப்பாளா் பி.தாகப்பிள்ளை, துணை அமைப்பாளா்கள் தயா இளந்திரையன், அன்பு, ராஜவேலு, பாலாஜி, கலைவாணன், மாணவரணி துணை அமைப்பாளா்கள் ராஜ்குமாா், முரளி, குணசேகா், அன்பழகன், லெனின்விஜய், சுகுமாா் மற்றும் திமுக நகர செயலா் சக்கரை, பொதுக்குழு உறுப்பினா் பஞ்சநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனா்.

திண்டிவனத்தில்...: திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலா் கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தயாளன், இளைஞரணி அமைப்பாளா் ஆனந்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சி சிவா, மாநில விவசாய அணி செந்தமிழ்ச்செல்வன், வழக்குரைஞரணி அசோகன், ஆதித்தியன், துணைச் செயலா் மலா்மன்னன், முஸ்தபா, காா்த்தி, ஆறுமுகம், வசந்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT