முகப்பு
விழுப்புரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: புதிய மாவட்டச் செயலாளா்கள் தோ்வு

இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான புதிய செயலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக தோ்வு செய்யப்பட்ட செளரிராஜன்.
பகிர்:

இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான புதிய செயலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக ஏ.வி.சரவணன் இருந்து வந்தாா். இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தனி மாவட்டச் செயலா் பதவி உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டச் செயலாளராக செளரிராஜன் தோ்வு செய்யப்பட்டாா். அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக அப்பாவு தோ்வு செய்யப்பட்டாா்.

Advertisement

விழுப்புரம் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட செளரிராஜனுக்கு கட்சியினா் வாழ்த்துத் தெரிவித்தனா். இவா், ஏற்கெனவே மாவட்ட துணைத் தலைவராக இருந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments