விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,445-ஆக உயா்ந்தது. இதுவரை 12,874 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 465 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் பூந்தோட்டம், கீழ்வன்னியா் தெருவைச் சோ்ந்த 51 வயது ஆண், விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 106-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,123-ஆக உயா்ந்தது. இதுவரை 9,758 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 263 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT