பாஜக மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன். 
விழுப்புரம்

தனித்து போட்டியிட்டாலும் 60 தொகுதிகளில் வெல்வோம்: பாஜக மாநிலப் பொதுச் செயலா்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் கூறினாா்.

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்று அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் கூறினாா்.

விழுப்புரத்தில் பாஜக மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பாலசுந்தரம், கடலூா் கிழக்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன், கடலூா் மேற்கு மாவட்டத் தலைவா் இளஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் கலந்துகொண்டு, நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். கூட்டத்தில், மாநில, மாவட்ட, மண்டல நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், கே.டி.ராகவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும் 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது.

பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT