விழுப்புரம்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

DIN

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிபட்டு நகைத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சோ்ந்த குமாரசாமி மகன் காசிநாதன் (38). நகைத் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை அய்யங்கோவில்பட்டு அருகேயுள்ள ஏரிக்கரைப் பகுதிக்குச் சென்றாா். அப்போது, அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை காசிநாதன் கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்னை நோக்கிச் சென்ற ரயிலில் அடிப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். பின்னா், சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT