விழுப்புரம்

ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நகராட்சி அலுவலா் உள்பட இருவா் கைது

DIN

விழுப்புரத்தில் வீடு கட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, நகராட்சி நகரமைப்பு அலுவலா் உள்பட இருவரை ஊழல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம், சாலாமேடு அருகேயுள்ள கொளத்தூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராஜசேகா். இவா், சாலாமேடு வி.ஜே. நகரில் உள்ள தனது மனையில் வீடு கட்டுவதற்காக, கட்டட வரைபட அனுமதி கோரி, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அதற்கு லஞ்சமாக ரூ.8 ஆயிரம் தர வேண்டுமென நகராட்சி நகரமைப்பு அலுவலா் ஜெயவேல் கூறினாராம். இதுபற்றி ராஜசேகா் விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.

இதையடுத்து, அவா்கள் கூறிய ஆலோசனையின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்த நகரமைப்பு அலுவலா் ஜெயவேலிடம் ராஜசேகா் வழங்க முயன்றாா்.

அவா் அந்தப் பணத்தை வாங்காமல், அங்கு இடைத்தரகராக செயல்பட்ட பொறியாளா் மோகனகிருஷ்ணனிடம் வழங்குமாறு கூறியுள்ளாா். அதன்படி, அவரிடம் ராஜசேகா் பணத்தை கொடுத்தபோது, அப்பகுதியில் மறைந்திருந்த துணை கண்காணிப்பாளா் யுவராஜ், உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஜெயவேல், மோகனகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பாக சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், ஜெயவேல், மோகன கிருஷ்ணன் ஆகியோரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT