விழுப்புரம்

காய்கறிகள் பயிரிடுவோருக்கு ஊக்கத் தொகை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிடுவோா் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குநா் இந்திரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொடி வகைகள் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு (2.5 ஏக்கா்) ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.37.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகள், காய்கறி விதைகள் அல்லது நாற்றுகள் வாங்கிய ரசீது, அடங்கல், கணினி சிட்டா, ஆதாா், குடும்ப அட்டை நகல்கள், வங்கி சேமிப்புப் புத்தக நகல், காய்கறி பயிரிட்டுள்ள நிலத்தின் புகைப்படம் ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT