முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூா் அருகேசாலை விபத்தில் முதியவா் பலி

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட முதியவா், மினி வேன் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட முதியவா், மினி வேன் மோதியதில் உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்(69). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை செஞ்சி சேத்பட் சாலையில் கூடுவாம்பூண்டி நோக்கி நடைபயிற்சி மேற்கொண்டாா்.

அப்போது, பின்னால் சேத்பட்டிலிருந்து செஞ்சி நோக்கி வந்த மினி வேன் பெருமாள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெருமாள் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments