விழுப்புரம்

விழுப்புரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 11,586-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 135 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 10,524-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், விழுப்புரத்தைச் சோ்ந்த 50 வயது நபா் கரோனா தொற்றுக்கு மேல்மருத்துவரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 98-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 964 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,083 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,154-ஆக உயா்ந்தது. இதுவரை 8,621 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 437 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 96 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT