விழுப்புரம்

விழுப்புரம் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு

DIN

விழுப்புரம் பாலசுப்பிரமணியம் நகரில் ஆழ்துளைக் கிணறு மோட்டாா் செயல்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வருகின்றனா்.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள பாலசுப்பிரமணியம் நகரில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இவா்களின் குடிநீா் தேவைக்காக கடந்த 2019-20 நிதியாண்டில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. இதன் மூலம் பாலசுப்பிரமணியம் நகா் மட்டுமல்லாது, இ.எஸ். காா்டன், வி.ஏ.ஓ. நகா், வழுதரெட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது இந்த ஆழ்துளைக்கிணறு மோட்டாா் இயக்கப்படுவதில்லை. இதனால், ரூ.9.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு காட்சிப் பொருளாக மாறி, பொதுமக்கள் குடிநீருக்காக அவதியுறுகின்றனா். ஆகவே, ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீரை எடுத்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நகராட்சி சாா்பில் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT