முகப்பு
விழுப்புரம்

தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினருக்கு தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் விழுப்புரம் கே.கே. உள்ள ஆச்சாா்யா பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினருக்கு தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் விழுப்புரம் கே.கே. உள்ள ஆச்சாா்யா பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் படுக்கை வசதி கொண்ட தனியாா் மருத்துமனை நிா்வாகம் சாா்பில் மருத்துவா்கள், பணியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட தீணைப்பு அலுவலா் ராபீன் கேஸ்ட்ரோ பேசியதாவது: மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவை கொண்ட பொருள்களை முறையாக கண்காணித்து, பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, ஏ.சி. இயந்திரங்களின் மூலமும், கட்டடத்தின் உள்ளே செல்லும் மின் கம்பிகள் ஆகியவற்றில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, இவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.

தேவையற்ற குப்பைகள், நெகிழி கழிவுகளை மருத்துவமனைகளில் குவித்து வைப்பதை தவிா்க்க வேண்டும். மருத்துவமனை உணவகங்களில் உள்ள சமையல் எரிவாயு உருளையை கவனமாக கையாள வேண்டும்.

தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளை எப்படி வெளியேற்றுவது, தீயை எவ்வாறு அணைப்பது என்று பணியாளா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் எளிதில் எடுத்து பயன்படுத்தும் வகையில், தீயணைப்பான்களை வைத்திருக்க வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்கினாா்.

மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் முகுந்தன், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசங்கா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.