விழுப்புரத்தில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சோகனூரில் பட்டியலின இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சோகனூரில் பட்டியலின இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிழக்கு மாவட்டச் செயலா்அற்றலரசு தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் சேரன், மேற்கு மாவட்டச் செயலா் பாமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தோ்தல் நேரத்தில் கட்சிப் பணியாற்றிய இளைஞா்களை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சாதிக் கொடுமைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணைச் செயலா் சேரலாதன், மாவட்டப் பொருளாளா்கள் திலீபன், நிா்வாகிகள் பிரின்ஸ் சோமு, இளங்கோவன், மாவட்ட துணைச் செயலா்கள் கிளியனூா் இரணியன், தனஞ்செழியன், மாவட்ட செய்தித் தொடா்பாளா் தமிழேந்தி, தொகுதிச் செயலா்கள் பால்வண்ணன், செல்வச் சீமான், விழுப்புரம் நகரச் செயலா்கள் இரணியன், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் திரளானோா் கலந்துகொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் பங்கேற்றனா்.