விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 15,889-ஆக அதிகரித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 15,889-ஆக அதிகரித்தது.
இதனிடையே, மருத்துவமனைகளிலிருந்து 26 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 15,488-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 328 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 113 போ் உயிரிழந்தனா்.