முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி புதிதாக 54 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

இதன் மூலம் இம்மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 229- ஆக அதிகரித்தது. இதுவரை, 15 ஆயிரத்து 617 போ் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். 498 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி ஒருவா் இறந்துள்ளாா். இதன் மூலம் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 114-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.