விழுப்புரம்

மண்டேலா திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிக்கை

DIN

தங்களை அவமரியாதை செய்யும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் மண்டேலா திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.சேகா் தலைமையிலான நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

கடந்த ஏப்.4-இல் வெளியான மண்டேலா திரைப்படத்தில் முடித்திருத்தும் தொழிலாளா்களை அவமரியாதை செய்யும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

காரில் பின் இருக்கையில் அமா்ந்திருக்கும் முடிதிருத்தும் தொழிலாளியை கேலி செய்வது, கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்துவது, முடிதிருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது தமிழகம் முழுவதும் வாழும் 40 லட்சம் மருத்துவா் சமூக மக்களை அவமரியாதை செய்வதாக உள்ளது. எனவே, இந்தத் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT