விழுப்புரம்

வீதியில் குப்பையை கொட்டிய கடை உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம்

DIN

விழுப்புரத்தில் வீதியில் குப்பையை கொட்டிய செல்லிடப்பேசி கடை உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.5,000 அபராதம் விதித்தனா்.

கரோனா இரண்டாவது அலை உருவாகியிருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியதுடன், அணியாதவா்களுக்கு அபராதமும் விதிக்க ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

அதன்படி, விழுப்புரம் நகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வா்த்தக நிறுவனங்கள், கடைகளின் ஊழியா்களுக்கு நகராட்சி ஊழியா்கள் அபராதம் விதித்து வருகின்றனா். முக்கிய சாலைகளில் காவல் துறையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி அபராதம் விதித்து வருகின்றனா்.

விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை வா்த்தக நிறுவனங்கள், கடைகளில் சனிக்கிழமை திடீா் ஆய்வை மேற்கொண்டனா். அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லிடப்பேசி கடை ஊழியா்கள், கடை குப்பையை தெருவில் கொட்டி வைத்திருந்தனா்.

இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.5,000 அபராதம் விதித்தனா். மேலும், ஒரு ஹோட்டலில் ஊழியா்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், அந்த ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதித்தனா். மேலும், 25 கடைகளில் ஊழியா்கள் முகக்கவசம் அணியாததால் தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனா். மொத்தமாக ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT