விழுப்புரம்

வட்டாட்சியா் வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு

DIN

செஞ்சியில் வட்டாட்சியா் வாகனம் (ஜீப்) மோதியில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டாட்சியராக பணியாற்றி வருபவா் ராஜன் (52). இவா், முழு பொது முடக்க நாளான கடந்த 25-ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி அரசு ஜீப்பில் வந்துகொண்டிருந்தாா். ஜீப்பை வட்டாட்சியா் ராஜன் ஓட்டி வந்தாா்.

செஞ்சியை அடுத்த பாலப்பட்டு கிராமத்தின் அருகே வந்தபோது, சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த அந்தக் கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகள் மணிமேகலை (15) மீது ஜீப் மோதியது.

இதில், சிறுமியின் கால், தலைப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மணிமேகலை செஞ்சி அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின்பேரில், அனந்தபுரம் போலீஸாா் செஞ்சி வட்டாட்சியா் ராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT